செயின்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவமனை நடத்தும் மூன்று நிலையங்கள்

செயின்ட் ஆண்ட்ரூஸ் மருத்துவமனை நடத்தும் மூன்று நிலையங்கள்

1 mins read

சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் உள்ள மூன்று முதியோர் பராமரிப்பு நிலையங்களை ஒருங்கிணைத்து நடத்தும் பொறுப்பை சுகாதார அமைச்சு, செயின்ட் ஆண்ட்ரூஸ் மிஷன் மருத்துவமனையிடம் ஒப்படைத்துள்ளது.

வரும் 2022ஆம் ஆண்டில் தாதிமை இல்லமும் மூத்தோர் பராமரிப்பு நிலையமும் ஒரே கூரையின் கீழ் தெம்பனிஸ் நார்த்தில் செயல்படத் தொடங்கும். அதேபோல் பிடோக் நார்த்திலும் பிடோக் சவுத்திலும் துடிப்பான முதுமையடைதல் மையங்களும் முறையே 2022லும் 2021லும் செயல்படும்.

ஆக, தீவின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பா ளர்களுக்கான இந்த மூன்று நிலையங்களை செயின்ட் ஆண்ட்ரூஸ் மிஷன் மருத்துவமனை நடத்துவதால், அங்கு உள்ள மக்களுக்கு தொடர்ந்த பராமரிப்பு கிடைக்கும் நேற்று முன்தினம் தெரிவிக்கப்பட்டது.

அந்த மருத்துவமனை குழுமத்தின் தலைமை நிர்வாகியும் சிங்கப்பூர் ஆங்கலிக்க சமூக சேவைகளின் தலைமை நிர்வாகியுமான டாக்டர் ஆர்தர் சென், இவ்விரு அமைப்பு களும் தனது ஒருங்கிணைந்த சமூக மற்றும் சுகாதார சேவைகள் மூலம் 22,000 பேருக்கு சேவையாற்றும் என்று கூறினார்.

நன்கொடையாளர்கள், பங்காளித்துவ அமைப்புகள் ஆகியவற்றின் ஆதரவால் இது சாத்தியமாகியுள்ளது என்றும் டாக்டர் சென் தெரிவித்தார்.

இவ்விரு அமைப்புகளும் நேற்று முன்தினம் நடத்திய நன்கொடை விருந்தில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.