வீடமைப்புப் பேட்டைகளில் சத்தத்தைக் கட்டுப்படுத்த புதிய சாதனங்கள்

வீடமைப்புப் பேட்டைகளில் சத்தத்தைக் கட்டுப்படுத்த புதிய சாதனங்கள்

1 mins read
c12f3685-bb50-4caa-a64b-61ae38bf1ad4
-

குடியிருப்பு வட்டாரங்களில் ஏற்படும் இரைச்சலைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக வீவக கட்டடக் கீழ்த்தளங்கள், கூடைப்பந்து கூடங்கள் போன்ற பொது இடங்களில் 'noise meter' எனும் சாதனம் பொருத்தப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அங் மோ கியோ, சுவா சூ காங், கிளமெண்டி, செம்பவாங், ஈசூன் ஆகிய வட்டாரங்களில் சாதனம் பொருத்தப்பட்டது. பச்சை, மஞ்சள், சிவப்பு ஆகிய நிறங்களைக் கொண்டு சத்தத்தின் அளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதை அச்சாதனம் காட்டும்.