ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று மக்கள் கோவில்களில் கூடி, இறை வழிபாட்டுடன் தங்களின் நாளைத் தொடங்குவர். இறைவனை வணங்கிய பின்னரே உறவினர் வீடுகளுக்குச் செல்வதும் கொண்டாட்டக் குதூகலத்தில் மூழ்வதுமாகத் தங்களின் நாளைக் கழிப்பர். அதேபோல் இவ்வாண்டும் தீபாவளித் தினத்தன்று சிராங்கூன் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலில் தீபாவளிக்கென ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு அன்பளிப்புப் பைகளும் சுவையான உணவும் வழங்கப்பட்டதாக கோயிலின் நிர்வாகத்தினர் கூறினர்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

