ஒவ்வொரு மாதமும் தமக்கு $575 மட்டுமே மத்திய சேம நிதிக் கணக்கிலிருந்து கிடைக்கிறது என்றும் அதனால் 'கிராப்' ஓட்டுநர் ஆகி கூடுதல் வருமானம் ஈட்டவேண்டியுள்ளது என்றும் ஃபேஸ்புக்கில் புலம்பிய 72 வயது திரு கிளிஃபர்ட் தெசேரா பகிர்வு இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து மசே நிதிக் கழகம் அதற்குப் பதில் அளித்துள்ளது.
திரு கிளிஃப்பர்ட் தமது சூழ்நிலையைப் பற்றி முழுமையாகக் கூறி விளக்கவில்லை என்றது கழகம். அவர் 55 வயதை அடைந்தது முதல் தமது மசே நிதிக் கணக்கிலிருந்து இதுவரை மொத்தம் $140,000 தொகையை எடுத்துள்ளதாகவும் அவர் அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் ஒவ்வொரு மாதமும் $1,000க்கும் மேல் கிடைக்கும் என்றும் கழகம் விளக்கியது. அத்துடன் தமது ஐந்தறை வீவக வீட்டுக்கான மொத்த தொகையையும் திரு கிளிஃபர்ட் கட்டி முடித்துள்ளதாகவும் கழகம் கூறியது.

