தங்கள் முதலாளிகளுடன் அல்லது வேலைவாய்ப்பு நிறுவனங்களுடன் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதைத் தீர்த்து வைக்கப் பணிப்பெண்கள் அடுத்த மாதம் முதல் இலவச சேவை பெறலாம். சமூக ஆதரவு மற்றும் பயிற்சிக்கான வெளிநாட்டு இல்லப் பணியாளர் சங்கம் இச்சேவையை வழங்கவுள்ளது. சேவையைப் பெற விரும்பும் பணிப்பெண்கள், முதலாளிகள், நிறுவனங்கள் என முத்தரப்புகளும் தங்களின் சந்திப்புக்கான முன்பதிவைச் செய்துகொள்ள வேண்டும்.
சமரசம் காண பணிப்பெண்களுக்கு அடுத்த மாதம் முதல் இலவச சேவை
1 mins read

