அதிகம் நாடப்படும் செயற்கை கருத்தரிப்பு முறைகள்

அதிகம் நாடப்படும் செயற்கை கருத்தரிப்பு முறைகள்

1 mins read

'ஐவிஎஃப்' உட்பட பல்வேறு செயற்கை கருத்தரிப்பு முறைகளை நாடும் தம்பதிகளின் எண்ணிகை அதிகரித்துக்கொண்டே வருவதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்கள் கூறியுள்ளன. ஆனால் ஐந்து முயற்சிகளில் சராசரியாக ஒரு முயற்சியே கைகூடுவதாகவும் கூறப்படுகிறது.

2017ஆம் ஆண்டில் இவ்வாறு செயற்கை கருத்தரிப்பு முறைகளால் சிகிச்சை நாடியோர் எண்ணிக்கை 7,700ஆக இருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையில் சராசரியாக 18 விழுக்காட்டினர் தங்கள் கருத்தரிப்பு முயற்சியில் வெற்றி கண்டனர். காலங்கடந்து திருமணம் செய்துகொள்வதால் பல தம்பதிகள் இவ்வாறு அறிவியல் உதவியை நாடுவதாக மருத்துவர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினர். இதற்கிடையே கருத்தரிப்பதற்குத் தேவைப்படும் கருப்பை முட்டைகளுக்காக சில தம்பதிகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளுக்குச் செல்வதாகவும் சண்டே டைம்ஸ் கண்டறிந்துள்ளது.