தமிழாசிரியர்களுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு தமிழ் முரசு ஏற்பாடு செய்துள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை நவம்பர் முதல் தேதி பிற்பகல் 2.30 முதல் மாலை 4.30 மணி வரை கலந்துரையாடல் நடைபெறும்.
தமிழ் முரசின் செயல்பாடுகள், செய்தி சேகரிப்பு, மின்னிலக்கமாக்க முயற்சிகள் போன்றவற்றுடன் இளையர்களின் இணையப் பயன்பாடு குறித்து கலந்துரையாடலில் பகிர்ந்துகொள்ளப்படும்.
மாணவர்களிடம் தமிழ் முரசை எவ்வாறு கொண்டு சேர்க்கலாம் என்பதை ஆசிரியர்கள் கலந்துரையாடலில் முரசு குழுவினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
தமிழ் முரசு விநியோகம் குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
இடம்: 1000, தோ பாயோ நார்த், எஸ்பிஎச் நியூஸ் சென்டர், சிங்கப்பூர் 318994, அறை T8.3.
மேல் விவரங்களுக்கு:
தொலைபேசி எண் - 6319 3692 மின்னஞ்சல் முகவரி - cirschool@sph.com.sg
பதிவுக்கு: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSet1AeCFnwWJiT9Y3Wyi52dPeltBOsmFPh6ImUaBtW4Mfwy1g/viewform

