செயற்கை நுண்ணறிவுத் துறை பொறியாளர்களுக்கு சான்றளிப்பு

செயற்கை நுண்ணறிவுத் துறை பொறியாளர்களுக்கு சான்றளிப்பு

1 mins read
a0be042e-a362-4142-aa52-865f048200e9
-

உள்ளூர் திறனாளர்களுக்கான தேவை அதிகரித்து வரும் வேளையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செயற்கை நுண்ணறிவு பொறியாளர்களுக்கான முதல் சான்றளிப்புக் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் பல வகையான பாடத்திட்டங்கள் உள்ளன.

ஆனால், செயற்கை நுண்ணறிவு திறன்களுக்குச் சான்றளிப்பதற்கான உலகளாவிய தரநிலை இல்லாததால், திறனாளர்களை வேலைக்கு அமர்த்தும்போது அவர்களிடம் உள்ள திறனை முதலாளிகளால் கணிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

மூன்று நிலை செயல்திறன்களைக் கொண்டுள்ள செயற்கை நுண்ணறிவு திட்டம், திறனாளர்களின் திறனைக் கணிப்பதில் நிலவும் இடைவெளியைக் குறைக்க உதவும் என ஏஐ சிங்கப்பூரின் தொழில்துறை புத்தாக்க இயக்குநர் லாரன்ஸ் லியூ நேற்று தெரிவித்தார்.

சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு ஆற்றலை மேம்படுத்துவதில் ஏஐ சிங்கப்பூர் கவனம் செலுத்துகிறது.

இந்தப் புதிய கட்டமைப்பின்கீழ், செயற்கை நுண்ணறிவு நிபுணர்களின் தொழில்நுட்பத் திறன்கள் மட்டும் மதிப்பிடப்படுவதோடு நின்றுவிடாது.

உண்மை நிலவர திட்டம் ஒன்றில் அவர்கள் பணியாற்றி உள்ளனரா என்பது பற்றியும் மதிப்பிடப்படும்.