சுற்றுச்சூழல் பாதுகாப்பு: செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ், சேட்ஸ் பங்காளித்துவம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ், சேட்ஸ் பங்காளித்துவம்

1 mins read

விமான நிலைய தள நிர்வாகிகள், உணவுத் துறை சார்ந்தோர் ஆகியோர் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உதவும் வகையில் 'சேட்ஸ்' அமைப்பு செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸுடன் இணைந்து செயலாற்ற உள்ளது. இதன்மூலம், வரும் 2030ஆம் ஆண்டு வாக்கில் கரிம அளவை 80%ஆகக் குறைக்கும் இரு நிறுவனங்களினதும் இலக்கை எட்ட முடியும் என்று நேற்று அவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன. இந்தப் பங்காளித்துவத்தின் முதல் முயற்சிகளில் ஒன்று, சூரிய சக்தி பயன்பாடு. முனையம் 1 முதல் 4 வரை கூரைகளில் சூரிய சக்தித் தகடுகளை செம்ப்கார்ப் அமைக்கும். இவற்றிலிருந்து மொத்தம் 7.8 மெகாவாட் சக்தியைப் பெறமுடியும். இது சேட்சின் விமான உணவு நிலையங்களுக்கும் பழுதுபார்ப்புப் பட்டறைகளுக்கும் எரிசக்தி வழங்கும்.

இதன்படி, சேட்சின் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் 12.4% மறுபயனீட்டு எரிசக்தியாக இருக்கும். இதன்வழி, ஆண்டுக்கு 4.1 மில்லியன் கிலோ கிராம் கரியமல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். இது ஆண்டுதோறும் 887 கார்களை சாலையில் இருந்து அகற்றுவதற்கு ஈடாகும்.

சாங்கியில் உள்ள சேட்ஸ் உணவு விநியோக 'ஏர்ஃபிரைட்' நிலையங்களில் திரவ இயற்கை எரிவாயுப் பயன்பாட்டைக் கண்டறிவதும் இந்தப் பங்காளித்துவத்தில் ஓர் அங்கமாகும்.