ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரில் 'அஸ்பெஸ்டாஸ்'

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரில் 'அஸ்பெஸ்டாஸ்'

1 mins read

சிங்கப்பூரில் விற்கப்படும் ஜான்சன் அண்ட் ஜான்சன் டால்கம் பவுடரில் அஸ்பெஸ்டாஸ் கலந்திருக்கவில்லை என்று சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரில் அஸ்பெஸ்டாஸ் துகள்கள் இருப்பதாக அமெரிக்க உணவு, மருத்துவ நிர்வாகம் தெரிவித்தது.

இதையடுத்து குழந்தைகளுக்கான 33,000 போத்தல் பவுடரை சந்தையிலிருந்து மீட்டுக் கொள்வதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அறிவித்தது.

2018ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட குறிப்பிட்ட தொகுப்பில் கலப்பட பவுடர் இருந்ததாகக் கூறப்படுகிறது.

பவுடரில் அஸ்பெஸ்டாஸ் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் முதல் முறையாக அறிவித்ததைத் தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் முதல் முறையாக பவுடர் போத்தல்களை மீட்டுக் கொண்டது.

இந்த நிலையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சுகாதார, அறிவியல் ஆணையம், அஸ்பெஸ்டாஸ் கலந்து உள்ள பவுடர் போத்தல்கள் அமெரிக்காவில் மட்டும் விற்கப்பட்டதாகவும் சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தது.

குழந்தைகளுக்கான பவுடர் உட்பட ஒப்பனைப் பொருட்களில் அஸ்பெஸ்டாஸ் கலப்பது ஒப்பனைப் பொருட்களுக்கான விதிமுறைகளின் கீழ் சிங்கப்பூரில் தடை செய்யப்பட்டு உள்ளது.

புற்றுநோய் போன்ற நோய்களை அஸ்பெஸ்டாஸ் ஏற்படுத்தக் கூடும் என்று நம்பப்படு கிறது.

இதற்கிடையே சிங்கப்பூரில் விற்கப்படும் பவுடரை சோதித்ததில் அஸ்பெஸ்டாஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

"இன்று வரை ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்தி பாதிப்பு ஏற்பட்டதாக புகார் எதுவும் வரவில்லை," ஆணையம் கூறியது.