அனைத்துலக குழிப்பந்து (கோல்ஃப்) விருதுகளில் எஸ்ஜிசி எனப்படும் செந்தோசாவின் குழிப்பந்து மன்றம், உலகின் தலைசிறந்த குழிப்பந்து மன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபு டாபியில் நேற்று நடந்த விருது நிகழ்ச்சியில் முதல் முறையாகக் கொடுக்கப்பட்ட இந்த விருதை சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்ஜிசி தட்டிச் சென்றது.
இதே விருது நிகழ்ச்சியில் செந்தோசாவின் செராப்போங் குழிப்பந்து திடல் சிங்கப்பூரின் ஆகச் சிறந்த குழிப்பந்து திடலாக அறிவிக்கப்பட்டு அதற்கும் விருது கொடுக்கப்பட்டது. இவ்விருது செந்தோசா குழிப்பந்து மன்றத்திற்கு மட்டுமின்றி சிங்கப்பூருக்கும் ஒரு சாதனையாக இருப்பதாக அம்மன்றத்தின் தலைவர் ஆண்ட்ரூ ஜான்ஸ்டன் நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

