பிடோக், லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கங்கள் மீது மிதக்கும் சூரிய சக்திக் தகடுகள்

பிடோக், லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கங்கள் மீது மிதக்கும் சூரிய சக்திக் தகடுகள்

1 mins read
7b0617af-ec76-4bfc-90b9-cbd948ffbf07
-

சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்யும் தகடுகள் அடுத்தாண்டு நடுப்பகுதிக்குள் இயங்கத் தொடங்கும் என பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.

பிடோக் மற்றும் லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கங்களின் மீது மிதக்கும் சூரிய சக்தித் தகடுகளைக் கொண்ட இரண்டு கட்டமைப்புகளை நிறுவுவதற்கான குத்தகையை 'பிபிஆர் கிரீன்டெக்' என்ற கட்டுமான குழுமத்திற்கு வழங்கியுள்ளதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் கூறியது.

இந்த இரண்டு கட்டமைப்புகள் ஏறத்தாழ 800 நான்கறை வீவக வீடுகளின் மின்சாரத் தேவைகளை நிறைவு செய்யும் வல்லமையைக் கொண்டவை. இந்த ஏற்பாட்டினால் பொதுப் பயனீட்டு கழகத்தின் கரியமிலவாயு வெளியாக்கம் ஆண்டுக்குச் சுமார் 1.5 கிலோ டன் குறையும்.

நீர்த்தேக்கங்களில் உள்ள இந்தக் கட்டமைப்புகள் 1.5 மெகாவாட் உச்சத்தில் இயங்கும். இவை உற்பத்தி செய்யும் மின்சாரத்தை 'பிடோக் வாட்டர்வர்க்ஸ்' நீர் சுத்திகரிப்பு ஆலையும் பிடோக் மற்றும் லோவர் சிலேத்தார் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இறைப்பு நிலையங்களும் பயன்படுத்தும்.

உலகின் ஆகப் பெரிய மிதக்கும் சூரிய சக்தித் தகடு கட்டமைப்புகளில் ஒன்று சிங்கப்பூரின் தெங்கா நீர்த்தேக்கத்தில் 2021ஆம் ஆண்டு நிறுவப்படும்.