சாலைகளில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் பயன்பாட்டுக்கு அனுமதி இல்லை. இருந்தபோதும் ஹவ்காங்கிலுள்ள சாலைகளில் அத்தகைய ஒரு சாதனம் விரைந்து போவதைச் சிலர் கண்டனர்.
அதிலும், மூன்று பேர் ஒரே மின்-ஸ்கூட்டரில் சவாரி செய்தனர். அதனைக் காட்டும் காணொளி 'எஸ்ஜி ரோட் விஜிலாண்டே' ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஹவ்காங் அவென்யூ 6ல் சாலையை எந்த பாதசாரிக்கும் வழிவிடாமல் அவர் அந்த ஸ்கூட்டரில் கடந்து சென்றதை அந்தக் காணொளி காட்டுகிறது. அதன் பிறகு அவர்கள் ஹவ்காங் அவென்யூ 10ல் போக்குவரத்து விளக்கு சிவப்பு ஒளியைக் கண்டும் காணாமலும் இருந்து நிறுத்தாமல் சென்றனர்.
இந்தச் சம்பவம் எப்போது நடந்தது என்பது தெளிவாக இல்லை.

