பூஞ்சை உட்பட கிட்டத்தட்ட பத்தாயிரக்கணக்கான நுண்ணுயிரிகளை நாம் சுவாசிக்கும்போது உள்ளிழுப்பதாகவும் இது ஆரோக்கியமான நபர்களைப் பாதிக்காவிட்டாலும் சுவாச நோய்கள் உள்ளவர்களைப் பாதிப்பதாகவும் ஆய்வு ஒன்று கூறுகிறது.
வெப்பமண்டல வட்டாரத்தின் சுற்றுப்புறத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட முதல் ஆய்வு இது. நாம் எவற்றைச் சுவாசிக்கிறோம் என்றும் அவை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அறிந்துகொள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் வாழ்க்கை அறிவியல் பிரிவைச் சேர்ந்த ஆய்வுக் குழு, இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன்படி சராசரியாக நாம் 100,000 முதல் 1 மில்லியன் வரையிலான நுண்ணுயிரிகளைச் சுவாசிக்கிறோம். கண்ணுக்குத் தெரியாத இவற்றில் பூஞ்சை, கிருமிகள் போன்றவையும் உள்ளடங்கும். இதனால் சுவாச நோய்கள் இருக்கும் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.

