சிங்கப்பூர் குடியுரிமை இல்லாத துணைவர்கள் உள்ள சிங்கப்பூரர்கள், முதல்முறையாக மறுவிற்பனை வீட்டை வாங்கும்போது கூடுதல் வீடமைப்பு மானியங்களுக்குத் தகுதிபெறுவர். 21 வயதுக்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் இக்கூடுதல் வீடமைப்பு மானியமாக $40,000 வரை பெறக்கூடும்.
இதற்குமுன் குடியுரிமை இல்லாதவரை திருமணம் செய்திருந்த சிங்கப்பூரர்கள், மானியம் பெற குறைந்தது 35 வயது இருக்கவேண்டும் என்றிருந்தது. இவர்கள் குடியுரிமை அல்லாத வாழ்க்கைத் துணை திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திற்குத் தகுதிபெறுவர். தம்பதியின் சராசரி மாதாந்திர வீட்டு வருமானத்தின் பாதித் தொகையை அடிப்படையாகக் கொண்டு மானியத் தொகை கணக்கிடப்படும் என்று கூறப்பட்டது.

