7.5 கிலோ எடை குறைந்து நோயுடன் சிதம்பரம் அவதி

7.5 கிலோ எடை குறைந்து நோயுடன் சிதம்பரம் அவதி

1 mins read

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குரோன் எனப்படும் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக வும் அவருக்கு தனித்துவ மான சிகிச்சை தேவைப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் டெல்லி நீதிமன்றம், சிதம்பரத்தை நவம்பர் 13ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ அமைப்பால் கைது செய்யப் பட்ட சிதம்பரம் குடல் அழற்சி நோயால் 7.5 கிலோ உடல் எடை குறைந்து, வயிற்றுவலியால் அவதிப்பட்டு வருகிறார்.

74 வயதான ப.சிதம்பரம் இதுவரை 4 முறை சிறையில் இருந்தபடியே மருத்துவ மனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சிறை செல்லும்போது 73.5 கிலோ இருந்த சிதம்பரம் தற்போது 66 கிலோ எடையுடன் உடல் நலிவுற்று மிக பலவீனமாக இருப்பதாகத் தெரிகிறது.