பகடி வதையின்போது முன்யோசனையின்றி நடந்துகொள்ள சகாவுக்கு உடந்தையாக இருந்த அதிகாரி

பகடி வதையின்போது முன்யோசனையின்றி நடந்துகொள்ள சகாவுக்கு உடந்தையாக இருந்த அதிகாரி

1 mins read
70f9acde-fc57-4cd1-a543-24dacbf79b8f
-

தேசிய சேவையாளர் கார்ப்பரல் கொக் யுவென் சின்னின் மரணத்தில் முடிந்த பகடி வதை சம்பவத்தின் தொடர்பில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதலாம் வாரன்ட் அதிகாரி முகம்மது ஃபாரிட் முகம்மது சாலே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள மூன்றாவது நபராக இருக்கிறார். சென்ற ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி துவாஸ் வியூ தீயணைப்பு நிலையத்தில், 22 வயது கார்ப்பரல் கொக் யுவென் சின் கிணற்றில் தள்ளிவிடப்பட்டதையடுத்து அவர் மூழ்கி இறந்தார்.

கார்ப்பரல் கொக்கை அந்த 12 மீட்டர் ஆழமான கிணற்றுக்குள் தள்ளிவிட 32 வயது ஸ்டாஃப் சார்ஜன்ட் முகம்மது நூர் ஃபாட்வா மஹ்மூத்தை 36 வயது முகம்மது ஃபாரிட் தூண்டியதாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நூர் ஃபாட்வா அந்தத் தூண்டுதல்களுக்குச் செவிசாய்த்து கார்ப்பரல் கொக்கைக் கிணற்றுக்குள் தள்ளினார்.

கார்ப்பரல் கொக்கின் ஈராண்டு தேசிய சேவையின் முடிவைக் கொண்டாடுவதற்காக அவர் இந்தப் பகடி வதைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஏற்கெனவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் நூர் ஃபாட்வாவுக்கு ஓராண்டு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் கடந்தாண்டு டிசம்பர் மாதம், 33 வயது ஸ்டாஃப் சார்ஜன்ட் அடிகஸாலி சுஹைமிக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரான 38 வயது லெஃப்டினன்ட் கென்னத் சோங், 40 வயது நஸான் முகம்மது நாஸி ஆகியோரது நீதிமன்ற விசாரணை தொடர்கிறது.