தேச நிறுவனர்கள் நினைவிடத் துக்கான தங்களுக்குப் பிடித்த கட்டட வடிவமைப்பை சிங்கப்பூரர்கள் இப்போது பார்த்து, தேர்வு செய்யலாம்.
சிங்கப்பூரின் முன்னோடித் தலைவர்களை நினைவுகூரும் வகையில் அமைக்கப்படும் இந்தக் கட்டடம் வரும் 2027ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
உள்ளூர் மற்றும் அனைத்துலக வடிவமைப்பு நிறுவனங்கள் சமர்ப் பித்த கட்டட வடிவமைப்புகளில் சிறந்த ஐந்து வடிவமைப்புகளை தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள் ளது. அந்த ஐந்து கட்டட வடிவ மைப்புகளை பொதுமக்கள் அடுத்த திங்கட்கிழமை (நவம்பர் 4ஆம் தேதி) முதல் பார்வையிடலாம்.
தேச நிறுவனர்கள் நினைவிட வடிவமைப்புக் கண்காட்சி என்று அழைக்கப்படும் இந்த நகரும் கண்காட்சி, ஜூரோங் ஈஸ்டில் உள்ள 'ஐஎம்எம்' கடைத்தொகுதியில் தொடங்கி டிசம்பர் 29ஆம் தேதி வரை தீவின் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்.
உத்தேச கட்டட வடிவமைப்பு களின் முப்பரிமாண மாதிரி வடி வங்கள் கண்காட்சியில் வைக்கப் பட்டிருக்கும். அவற்றுடன் ஒவ் வொரு வடிவமைப்புக்குப் பின்னால் உள்ள தகவல்களை விளக்கும் காணொளிகளும் இடம்பெறும்.
இந்த ஐந்து கட்டட வடிவமைப்புகளில் எது தங்களைக் கவர்ந்துள்
ளது என்பதைத் தேர்வு செய்து சிங்கப்பூரர்கள் டிசம்பர் மாதம் கடைசி தேதி வரை www.founders memorial.sg எனும் இணையப்பக்கத்தில் வாக்களிக்கலாம்.
இந்தக் கட்டடத்துக்கான வடிவ மைப்புகளை ஈர்க்க இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் அனைத்துலக அளவில் போட்டி ஒன்று நடத்தப் பட்டது. அதற்கு மொத்தம் 193 சமர்ப்பிப்புகள் வந்தன.
மரினா பே வட்டாரத்தில் உள்ள பே ஈஸ்ட் பூங்காவில் 5 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைய இருக்கும் தேச நிறுவனர்கள் நினைவிடம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்ற சில பத்தாண்டுகள் வரை நாட்டின் வளர்ச்சி பற்றிய கதையின் முக்கிய மைல்கற்களைச் சித்திரிப்பதாக இருக்கும்.
டிசம்பர் மாத இறுதியில் சிங்கப் பூரர்களின் வாக்களித்தல் முடிந்த வுடன் எழுவர் கொண்ட தேர்வுக் குழு அதிக வாக்குகளைப் பெற்ற வடிவமைப்புகளின் செயல்திறன், தொழில்நுட்ப சாத்தியங்கள், அதன் சுற்றுப்புறம் போன்ற அம்சங்களை ஆழ்ந்து ஆராய்ந்து சிறந்த வடிவ மைப்பைத் தேர்வு செய்யும்.
இணையம் வழி பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் தேர்வுக் குழு எடுக்கும் முடிவுக்கு முக்கிய மானதாக இருக்கும் என்று பேச் சாளர் ஒருவர் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற வடிமைப்பு பற்றி அடுத்த ஆண்டு முதலாம் காலாண் டில் அறிவிக்கப்படும். அதன் கட்டு மானப் பணிகள் 2021ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது என்றும் கூறப்பட்டது.

