தேசிய சேவையாளர் கார்ப்பரல் கொக் யுவென் சின்னின் மரணத்தில் முடிந்த பகடி வதை சம்ப வத்தின் தொடர்பில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் முதலாம் வாரண்ட் அதிகாரி முகம்மது ஃபாரிட் முகம்மது சாலே குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ள மூன்றாவது நபர்.
சென்ற ஆண்டு மே மாதம் 13ஆம் தேதி துவாஸ் வியூ தீய ணைப்பு நிலையத்தில், 22 வயது கார்ப்பரல் கோக் யுவென் சின் கிணற்றில் தள்ளிவிடப்பட்டதை யடுத்து அவர் மூழ்கி இறந்தார்.
கார்ப்பரல் கோக்கை அந்த 12 மீட்டர் ஆழமான கிணற்றுக்குள் தள்ளிவிட 32 வயது ஸ்டாஃப் சார்ஜண்ட் முகம்மது நூர் ஃபாட்வா மஹ்மூத்தை 36 வயது முகம்மது ஃபாரிட் தூண்டியதாக இரண்டாம் தலைமை மாவட்ட நீதிபதி விக்டர் இயோ உறுதி செய்தார்.
சம்பவம் நடந்த நாளன்று, கார்ப்பரல் கோக்கின் தேசிய சேவை நிறைவைக் குறிக்க கேக் வெட்டி கொண்டாட பெரும்பா லான அதிகாரிகள் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையில் கூடினர்.
அப்போது சில அதிகாரிகள் கோக்கை தூக்கி, கிணற்றுக்கு அருகில் கொண்டு சென்றனர்.
நூர் ஃபாட்வா அந்தத் தூண்டு தல்களுக்குச் செவிசாய்த்து கார்ப்பரல் கோக்கைக் கிணற்றுக்குள் தள்ளினார்.
சம்பவம் பற்றி அறிந்து தீய ணைப்பு நிலையத்தின் தலைவர் ஹுவாங் வெய்கியாங் விசாரித்த போது, தான் கோக்கை கிணற்றுக் குள் தள்ளிவிட்டதையும் அதை ஃபரிட் சொல்லித்தான் செய்தேன் என்றும் ஃபட்வா கூறினார்.
அப்போது அருகில் இருந்த ஃபரிட் அதை மறுத்து எதுவும் சொல்லவில்லை என்று நீதிபதி சுட்டினார்.
ஃபரிட்டும் ஃபட்வாவும் நெருங் கிய நண்பர்கள் என்றும் ஃபரிட் மீது பழிபோட ஃபட்வாவுக்கும் எவ் வித காரணமும் இல்லை என்றும் நீதிபதி விவரித்தார்.
ஃபட்வா குற்றச்சாட்டை தனி யாக எதிர்கொள்ள விரும்பவில்லை என்றும் அதனால்தான் ஃபரிட் மீது பழி சுமத்துகிறார் என்றும் தற்காப்புத் தரப்பு வாதிட்டதை நீதிபதி நிரா கரித்தார்.
ஏற்கெனவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் நூர் ஃபாட்வாவுக்கு ஓராண்டு, நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன் கடந்தாண்டு டிசம்பர் மாதம், 33 வயது ஸ்டாஃப் சார்ஜண்ட் அடிகஸாலி சுஹைமிக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரான 38 வயது லெஃப்டினன்ட் கென்னத் சோங், 40 வயது நஸான் முகம்மது நாஸி ஆகியோரது நீதிமன்ற விசாரணை தொடர்கிறது.
ஃபரிட் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது கருணை மனு கோரிக்கையும் தண் டனை விதிப்பும் நவம்பர் மாதம் 20ஆம் தேதி இடம்பெறும்.

