இந்த ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவை முன்னிட்டு "உலக இலக்கியத்தை சிங்கப்பூர்த் தமிழர்களிடம் சேர்த்த பி கிருஷ்ணன்" எனும் தலைப்பில் வரும் ஞாயிறு காலை 11.30 முதல் பகல் 1 மணி வரையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கலாசாரப் பதக்கம் பெற்ற சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளரான பி கிருஷ்ணனின் (படம்) 'உலகப் பெருங்கதைகள்' வானொலி நாடகங்களும் அவரது மொழிபெயர்ப்பு நாடகங்களும் சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்துக்கு உலக இலக்கியச் சாளரமாய் அமைந்தன.
இவரது முன்னைய, புதிய மொழிபெயர்ப்புகளின் மேடைவாசிப்பும் அவரது மொழிபெயர்ப்புகளின் தாக்கம் பற்றிய கலந்துரையாடலும் இந்நிகழ்வில் இடம்பெறுகின்றன.
வழக்கறிஞரும் மேடைக் கலைஞருமான திரு வடிவழகன், பொறியாளர் திரு அருள் ஓஸ்வின், மாணவி குமாரி அஸ்வினி செல்வராஜ், தமிழாசிரியர் ஷேக் அப்துல்லா அப்துல் அர்ஷத் ஆகியோர் நிகழ்ச்சியைப் படைக்கின்றனர். சிங்கப்பூர் தமிழ் எழுத்தா ளர் கழகத்துடன் இணைந்து படைக்கப்படும் இந்த நிகழ்ச்சியை கழகத்தின் செயலாளர் கிருத்திகா வழிநடத்துவார்.
மேல் விவரங்களுக்கு: https://www.singaporewritersfestival.com/nacswf/nacswf/programme-listing.html

