172 ஆண்டுகளுக்கு மேலாகக் காணப்படாத பாம்பு புக்கிட் தீமா இயற்கை காப்பகத்தில் காணப்பட்டுள்ளது.
செப்டம்பர் 16ஆம் தேதியன்று தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் டாக்டர் ஜான் வேன் வை, 'லைன்ட் பிளைண்ட் சிநேக்' (lined blind snake) என்ற அந்தப் பாம்பைக் கண்டுபிடித்தார். அங்குள்ள ஒரு சைக்கிள் பாதையில் அந்தப் பாம்பு இறந்து கிடந்தது.
இந்த இனத்து கருநாகம் இன்னமும் பூமியில் வாழ்கிறதா என்ற சந்தேகத்தை இந்தக் கண்டுபிடிப்பு போக்கியுள்ளது.
மலேசியாவிலும் மிக அரிதாகக் காணப்படும் இந்தப் பாம்பு சிங்கப்பூரில் காணப்பட்டது எதிர்பாராத ஒன்று என அந்தப் பாம்பை அடையாளம் கண்ட திரு லா இங் சின்ட் தெரிவித்தார். மழைக்காட்டு மண்ணுக்குள்ளே இரைத் தேடும் இந்த இனத்துப் பாம்பு, தனது வாழ்நாள் முழுவதும் மண்ணுக்குள்ளேயே உழல்வது வழக்கம் என அவர் கூறினார்.

