தமிழ் முரசின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற தமிழாசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உயர்நிலை, தொடக்கநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 15 ஆசிரியர்கள் பங்கேற்றனர். எஸ்பிஎச் நியூஸ் சென்டரில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் முரசின் செயல்பாடுகள், செய்தி சேகரிப்பு, மின்னிலக்கமாக்க முயற்சிகள் போன்றவற்றுடன் இளையர்களின் இணையப் பயன்பாடு ஆகியவற்றைப் பற்றி உரையாடப்பட்டது.
தமிழ் முரசை மேலும் ஆர்வத்துடன் படிக்க மாணவர்களை எப்படி ஈர்ப்பது என்பது குறித்த சில யோசனைகளை ஆசிரியர்கள் முன்வைத்தனர். ஆசிரியர்கள் தமிழ் முரசு ஆசிரியர்களுடனும் நிருபர்களுடனும் கலந்துறவாடி அதன் செயல்பாடுகளைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டனர்.

