உள்துறைக் குழுவின் தேசிய சேவையாளர்களும் அவர்களின் குடும்பங்களும் 'வில்லா' எனும் ஓய்வு விடுதிகளையும் சிங்கப்பூ ரின் ஆக நீளமான உள்ளரங்கு நீர்ச்சறுக்கு விளையாட்டையும் புதிய பிடோக் மனமகிழ் மன்றத்தில் அனுபவிக்கலாம்.
நீர்முகப்பு கருப்பொருளைக் கொண்டு பிடோக் நீர்த்தேக்கப் பூங்காவில் அமைக்கப்படும் மன மகிழ் மன்றம் 2021ஆம் ஆண்டு நான்காம் காலாண்டில் திறக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
உள்ளரங்கு நீர் விளையாட்டுப் பகுதி, 'இன்ஃபினிட்டி' நீச்சல் குளம், உறுப்பினர்களை மட்டும் அனுமதிக்கும் ஓய்வு, கேளிக்கை அறை ஆகியவையும் புதிய மன மகிழ் மன்றத்தில் இருக்கும்.
நேற்று நடைபெற்ற நிலஅகழ்வு சடங்கில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம், "மூன்று நவீன மனமகிழ் மன்றங்களில் ஒன் றான பிடோக் மனமகிழ் மன்றம், அமைந்திருக்கும் இடம், வடிவ மைப்பு, நடவடிக்கைகள் என்று எல்லாவற்றிலும் முதல் தரத்தில் இருக்கும்.
"கட்டட வடிவமைப்பிலும் இந்த மனமகிழ் மன்றம் தேசிய சேவை யாளர்களின் உணர்வுகளைப் பிரதி பலிப்பதாக இருக்கும் அதே வேளையில், அவர்களின் பங்க
ளிப்பை நாம் மதிப்பதையும் வெளிப்படுத்துவதாக இருக்கும்," என்று அமைச்சர் விவரித்தார்.
காத்திப் பகுதியில் உள்ள இரண்டாவது மனமகிழ் மன்றத் தின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கும் என்றும் மூன்றாவது மனமகிழ் மன்றம் தெங்கா பகுதி யில் அமைந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிடோக் மனமகிழ் மன்றத்தில் 10 'வில்லா' எனும் ஓய்வு விடுதிகள் இருக்கும். அவற்றில் ஒவ்வொன் றிலும் கூரையுடன் கூடிய 'பார்பக்யூ' பகுதியும் மொட்டைமாடியும்
உள்ளடக்கப்பட்டிருக்கும்.
ஒவ்வொரு வில்லாவும் 1,400 முதல் 1,600 சதுர அடி அளவில் இருக்கும். அது வீடமைப்பு வளர்ச்சிக் கழக எக்சகியூட்டிவ் வீட்டு அளவுக்கு ஒப்பானது.
அவற்றைக் குறுகிய கால ஓய் வுக்கு உள்துறைக் குழுவின் எல்லா தேசிய சேவையாளர்களும் பயன் படுத்திக்கொள்ளலாம்.
பிடோக் மனமகிழ் மன்றத்தில் மூன்று மாடி உயரத்தில் உள்ளரங்கு நீர் விளையாட்டு வசதி இருக்கும். அதில் சிங்கப்பூரின் ஆக நீளமான 114 மீட்டர் நீளம் கொண்ட உள் ளரங்கு நீர்ச்சறுக்கு வசதியும் அமைக்கப்பட்டிருக்கும்.
மேலும் உள்ளரங்கில் ஈர தடைக் கயிறு பயிற்சியும் வானவில் வடி விலான சுரங்க சறுக்கு விளை யாட்டும் உண்டு.
தேசிய சேவையாளர்கள் தெரி வித்த கருத்துகளின் அடிப்படை யில் வடிவமைக்கப்பட்டுள்ள பிடோக் மனமகிழ் மன்றம் $79 மில்லியன் செலவில் கட்டப்படும்.
40,000 உள்துறைக் குழுவின் தேசிய சேவையாளர்களும் அவர் களின் குடும்பங்களும் பயன்படுத் தக்கூடிய பிடோக் மனமகிழ் மன்றத் தில் நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு சூரிய ஒளித் தகடுகளும் மழைநீர் சேகரிப்பு வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.

