இன்னும் அதிகமான வெளிநாட்டுப் பெண்கள் இணையத் தளங்கள் மூலம் பாலியல் சேவை வழங்கி வருவதாகவும் குடியிருப்புப் பேட் டைகளில் பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் அதிகமாகி வரு கின்றன என்றும் போலிசார் தெரி வித்துள்ளனர்.
போலிஸ் தெரிவித்த புள்ளி விவரங்களின்படி, ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் இணையம் மூலம் பாலியல் சேவை வழங்கியதற்காக அதிகமான வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வரு கிறது.
கடந்த ஆண்டு இதன் தொடர் பில் 1,417 பெண்கள் கைதாகினர். இது 2015ஆம் ஆண்டு எண்ணிக் கையைக் காட்டிலும் இருமடங்கு அதிகம்.
கடந்த மாதம் 25ஆம் தேதி உட்லண்ட்சில் உள்ள குடியிருப்புப் பேட்டையில் போலிசார் மேற் கொண்ட திடீர் சோதனை நடவடிக் கையில், 25 முதல் 45 வயது வரை யிலான ஆறு பெண்கள் பாலியல் சேவைகள் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டனர்.
இந்தக் குற்றச் சம்பவத்தில் அந்த வீட்டின் உரிமையாளர்கள் இத்தகைய குற்றங்கள் நடைபெறு வதைத் தவிர்ப்பதற்கு முக்கிய பங்கு வகித்தனர் என்று போலிசார் நேற்று செய்தியாளர்கள் தெரி வித்தனர்.
வீவக வீடுகள் குடியிருப்புக்கு மட்டுமே தவிர அதில் பாலியல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது சட்டப்படி குற்ற மாகும் என்று தெரிவித்த போலிஸ், தெரிந்த இத்தகைய நடவடிக்கை களுக்கு உடந்தையாக இருக்கும் வீட்டு உரிமையாளர்களும் மாதர் சாசனத்தின் கீழ் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறி னர்.
மாதர் சாசனத்தில் செய்யப்பட இருக்கும் திருத்தங்களுக்குப் பின், வீட்டு உரிமையாளர்கள், வாடகை தாரர்கள், சொத்து முகவர்கள் போன்றோர் பாலியல் குற்றங்களைத் தவிர்ப்பதற்கு முக்கிய பங்கு வகுக்க வழி ஏற்படுத்தப்படும் என்று துணை உதவி ஆணையாளர் டெக்குலன் கோ தெரிவித்தார்.
குடியிருப்புப் பேட்டைகளில் பாலியல் தொடர்பான நடவடிக்கை கள் அதிகமாகி வருவது கவலைக் குரிய விவகாரமாக உருவெடுத் துள்ளது என்றும் திரு கோ விவ ரித்தார்.
குடியிருப்புப் பேட்டைகளில் இது வரை பாலியல் குற்றங்களுக்காக எத்தனை பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள் எனும் தகவல் உடனடி யாகக் கிடைக்கவில்லை என்றா
லும் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கூட்டுரிமை வீடுகள், குடியிருப்புகள், ஹோட்டல் கள் ஆகியவற்றில் 106 பெண்கள் பாலியல் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலி சார் கடந்த மாதம் தெரிவித்தனர்.
தங்கள் வீடுகளில் பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் நடை பெறாமல் இருப்பதை வீட்டு உரி மையாளர்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வீட்டு முகவர் களும் வீடுகளை வாடகைக்குப் பரிந்துரைக்கும் முன் பாலியல் நட வடிக்கைகள் தொடர்பில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் டெக்குலன் கோ கூறினார்.

