தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தோ பாயோவில் காருடன் மோதிய 'பிஎம்டி' ஓட்டுநருக்குக் காயம்

1 mins read
f294a184-d7c5-4369-b558-f53daa5e26bb
தோ பாயோவில் நேற்று முன்தினம் இரவு ஒரு காருடன் மோதிய தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநர் ஒருவர் காயங்கள் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.  -

தோ பாயோவில் நேற்று முன்தினம் இரவு ஒரு காருடன் மோதிய தனிநபர் நடமாட்டச் சாதன ஓட்டுநர் ஒருவர் காயங்கள் காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தோ பாயோ, லோரோங் 5ல் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து போலிசுக்கு இரவு 10.42 மணிக்குத் தகவல் கிடைத்தது. சுயநினைவுடன் அந்த பிஎம்டி ஓட்டுநர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

காயமடைந்த அந்த ஆடவரால் தலையை அசைக்க முடியவில்லை என்றும் மருத்துவ அதிகாரிகள் அவரது கழுத்துக்குப் பாதுகாப்புக கவசம் அணிவித்தனர் என்றும் சம்பவத்தை நேரில் பார்த்த ரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவரான 25 வயது டான் வெய் சியன் தெரிவித்தார்.

அந்த ஆடவர் எந்த உணவு விநியோக நிறுவனத்துக் காக வேலை செய்தார் என்று தெளிவாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலிசார் விசாரணை தொடர்கிறது.