சவூதி அரேபிய மன்னர் சல்மான் அப்துல் அஜிஸ் அல்சவுத்தின் அழைப்பை ஏற்று அதிபர் ஹலிமா யாக்கோப் வரும் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சவூதி அரே பியாவுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்கிறார்.
இம்மாதம் 8ஆம் தேதி வெள் ளிக்கிழமை வரை அதிபர் அங்கு இருப்பார்.
இது சிங்கப்பூரின் தலைவர் ஒருவர் சவூதிக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் என்பது குறிப் பிடத்தக்கது.
சவூதி பயணத்துக்கு முன் அதிபர் ஹலிமா, இன்று குவைத் துக்குப் புறப்படுகிறார். குவைத் தின் தலைவர் அமிர் ஷேக் சபா அல் அகம்மது அல் ஜபார் அல் சபா, அதிபருக்கு அழைப்பு விடுத் துள்ளார்.
இது சிங்கப்பூர் தலைவர் ஒரு வர் குவைத்துக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம். முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதன் கடந்த 2008ஆம் ஆண்டில் குவைத்துக்கு முதன் முதலாகப் பயணம் மேற் கொண்டார்.
சிங்கப்பூர் அதிபர் என்ற முறை யில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு திருவாட்டி ஹலிமா மேற்கொள் ளும் முதல் பயணம் இது.
அதிபர் நாடு திரும்பும் வரை, அதிபர் ஆலோசனை மன்றத்தின் தலைவர் திரு எடி டியோ தற்கா லிக அதிபராகச் செயல்படுவார்.
அதிபர் ஹலிமாவுடன், அவரது கணவர் திரு முகம்மது அப்துல்லா அல்ஹப்ஷி, சுற்றுப்புற நீர்வள அமைச்சரும் முஸ்லிம் விவகாரங் களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான மசகோஸ் ஸுல் கிஃப்லி, வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஃபூ மீ ஹார், ஜோன் பெரேரா ஆகி யோரும் செல்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

