உட்லண்ட்ஸ் அவென்யூ 2க்குள் செல்லும் துணைச்சாலையில் லாரியுடன் விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்தார்.
உதவிக்கான அழைப்பு காலை 8.15 மணிக்கு போலிசாருக்குக் கிடைத்தது. சம்பவ இடத்திலேயே அந்த 22 வயது மோட்டார் சைக்கிளோட்டி மாண்டதாக உறுதி செய்யப்பட்டது.
இதில் சம்பந்தப்பட்ட 27 வயது லாரி ஓட்டுநர் தற்போது விசாரணைகளுக்கு உதவி வருகிறார்.
மத்திய விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலை வழியாக, உட்லண்ட்ஸ் அவென்யூ 2க்குள் செல்லும் துணைச்சாலையில் இந்த விபத்து நேர்ந்தது.
சாலையில் மோட்டார்சைக்கிள் விழுந்து கிடந்ததையும் அதன் முன்புறத்தில் லாரி, அருகில் போலிஸ் கூடாரம், சம்பவ இடத்தில் மருத்துவ துணை அதிகாரிகள் ஆகியவற்றையும் காட்டும் படங்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

