என்யுஎஸ் கலந்துரையாடல்: இனவாதம் கண்டிக்கப்பட வேண்டும்

சமூக ஊடகத்தில் இனவாத கருத்துகள் பதிவு செய்யப்பட்டால் அதனால் ஏற்படக்கூடிய சர்ச்சையை மற்றவர்கள் மட்டுப்படுத்த முடியும். இன உறவுகள் மீது சமூக ஊடகம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இன்று கலந்துரையாடிய குழு ஒன்று, இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் இனவாத கருத்துகளைக் கண்டிக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தியது.

அத்தகைய கருத்துகளைக் கண்டிக்காவிட்டால், சிங்கப்பூரில் இனவாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்ற தவறான மனப்போக்கை மக்களிடம் ஏற்படுத்தும் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் (என்யுஎஸ்) நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அக்குழுவினர் கூறினர்.

என்யுஎஸில் சமூக ஊடக நிபுணரான இணைப் பேராசிரியர் ஏட்ரியன் ஹெங், “ஒரே நாளில் நம்மால் உலகத்தை மாற்ற முடியாது. ஆனால், நமது வட்டத்திற்குள் என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கத் தொடங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,” என்றார்.

தீபாவளியன்று தமது வீட்டிற்கு வந்த விருந்தாளிகளின் காரை கார் நிறுத்தத்தில் இரவு 11 மணிக்குப் பிறகு நிறுத்தியதற்காக, $10 கட்டணம் விதித்த பாதுகாவல் அதிகாரியை கொண்டோமினிய குடியிருப்பாளர் ஒருவர் திட்டியதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதைப் பேராசிரியர் ஹெங் உதாரணமாக சுட்டினார்.

இந்தக் காணொளி, இனவாத கருத்துகளைத் தூண்டியது. இராமல்லி ரமேஷ் என்று அடையாளம் காணப்பட்ட அந்த குடியிருப்பாளர் வெளியே அனுப்பப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை இணையவாசிகள் பதிவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாவல் அதிகாரி ஸ்டீவன் ஹெங்கும் திரு இராமல்லி ரமேஷும் போலிசிடம் புகார் அளித்துள்ளனர். தமக்கு தொந்தரவு அளிக்கப்பட்டதாக அந்தப் பாதுகாவல் அதிகாரி புகார் அளித்தார். மற்றொரு புறம், தமது பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் வெளியானதால் தாம் துன்புறுத்தலுக்கு ஆளானதாக திரு இராமல்லி புகார் அளித்தார்.

இந்தக் காணொளியில் இனவாதம் தெரியவில்லை என்றாலும், இந்தக் காணொளிக்குப் பின் வந்த கருத்துரைகள், அந்தக் குடியிருப்பாளரின் இனத்தை அடையாளம் காட்டின.

இதைத் தடுப்பதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் அமைதி வேண்டி போதிய அளவுக்கு குரல்கள் ஒலிக்கவில்லை என்றார் பேராசிரியர் ஹெங்.

என்யுஎஸ் தொடர்பு மற்றும் புதிய ஊடகத் துறை, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் ஆகியவற்றுடன் இணைந்து ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அமைப்பு இந்தக் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!