வெளிநாட்டுத் தாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய வேலைகளில் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவது பற்றிய விவகாரத்தை அரசாங்கம் பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.
"ஊடகம், தொடர்பு போன்ற சமூக, அரசியல் அக்கறைகளை கொண்டிருக்கும் வேலைகளில் வெளிநாட்டுத் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால், அப்படிப் பட்ட வேலைகளுக்கு முற்றிலும் சிங்கப்பூரர்களை அமர்த்தலாமா," என்று நியமன உறுப்பினர் ஆந்தியா ஓங் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர், இந்த விவகாரத்தைப் பரந்த கண்ணோட்டத்துடன் பார்கக வேண்டும். உதாரணத்துக்கு, வேலை கொடுக்கும் அமைப்பு களின் பின்னணி, அந்த முதலாளிகள் வெளிநாட்டுத் தாக்கத்தால் ஈர்க்கப்படும் சாத்தியம், அங்கு உள்ள கட்டுப்பாடுகள், வெளிநாட்டுத் தாக்கம் ஏற்படுமாயின் அதைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளதா என்று பலவற்றை நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்," என்று விவரித்தார்.
"சிங்கப்பூரர்கள் வெளிநாட்டுத் தாக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ளலாம் என்று மற்றொரு நியமன உறுப்பினர் வால்டர் தெசேரா கேட்டார்.
"அனைத்து வெளிநாட்டுத் தாக்கத்தையும் நாம் தவிர்க்க வேண்டும் என்பதில்லை. நமது சமூகத்தின் ஒற்றுமையைக் குலைக்கும், நமது நாட்டை வலுவிழக்கச் செய்யும், நமது வெளிநாட்டுக் கொள்கையைப் பாதிக்கும் வெளி நாட்டுத் தாக்கத்துக்கு எதிராக நாம் செயல்பட வேண்டும். தன் னைப் பாதுகாத்துக்கொள்வது ஒவ் வொரு நாட்டின் கடமையாகும்," என்று அமைச்சர் பதிலளித்தார்.
"சில அம்சங்களில் எத்தகைய வெளிநாட்டுத் தாக்கத்தையும் தற் போதைய சட்டம் தடை செய்கிறது. உராணத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சி களும் வெளிநாட்டு அமைப்புகளிட மிருந்தும் வெளிநாட்டினரிடம் இருந் தும் நன்கொடைகளைப் பெறக் கூடாது.
"சில வகை, சில பிரிவு வேலை களில் உள்ள அபாயங்களை நீங் கள் அடையாளம் காண வேண் டும். சிங்கப்பூரர்களின் கருத்து களைப் பிரதிநிதிக்கும், தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் போன்ற அமைப்புகள் எந்த வெளி நாட்டு அமைப்புகளிடமிருந்தும் நன் கொடைகளைப் பெறக்கூடாது," என்று திரு சண்முகம் விளக்கம் அளித்தார்.
"அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் வெளிநாட்டு அமைப்பு களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுதலை யாராலும் தடுக்க முடி யாது. ஆனால், அவர்களிடம் இருந்து பணம் பெறக்கூடாது.
"இதில் முக்கியமானது என்ன வென்றால், சிங்கப்பூர் அரசியல் என்பது சிங்கப்பூரர்களுக்கு மட்டும் தான். ஆக, இதிலிருந்து உங்க ளுக்கு நான் சொல்லாமலே இரு கருத்து புரிந்திருக்க வேண்டும். அரசியல் ரீதியில் சிங்கப்பூருக்கு வெளியே உள்ளவர்களிடம் நாம் தொடர்பு வைத்திருக்கக்கூடாது," என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

