தங்கள் வீடுகளைப் பாலியல் சேவைகளுக்குப் பயன்படுத்தும் உரிமையாளர்களுக்குத் தண்டனை கடுமையாகிறது

தங்கள் வீடுகளைப் பாலியல் சேவைகளுக்குப் பயன்படுத்தும் உரிமையாளர்களுக்குத் தண்டனை கடுமையாகிறது

2 mins read

தங்கள் வீடுகளைப் பாலியல் சேவைகளுக்காக பயன்படுத்தும் வீட்டு உரிமையாளர்களுக்கு நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாதர் சாசனத் திருத்த மசோதாவின் கீழ் கடு மையான தண்டனை விதிக்கப் படும்.

"வீடமைப்புப் பேட்டைகளைப் பாலியல் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்கவும் சட்டத்திலிருந்து தப்பிக்க தங்கள் பாலியல் சேவைகள் நடவடிக்கையை வெளிநாட்டுக்கு மாற்றுவோரைப் பிடிக்கவும் இந்தச் சட்டத் திருத்தங் கள் உதவும் என்றார் உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங்.

முக்கிய திருத்தங்களில் ஒன்று, வெளிநாட்டிலிருந்து இணையம் வழியாகவோ அல்லது உடனடி தக வல் செயலி வழியாகவோ பாலியல் சேவைகளை நடத்துவோரையும் இந்தச் சட்டத் திருத்தங்கள் கைது செய்ய வழி வகுக்கும்.

'புரோத்தல்' எனும் அழைக்கப் படும் விலைமாதர் இல்லம் என்ற விளக்கத்தின் விரிவாக்கம் சட்டத் தில் செய்யப்பட்டிருக்கும் மற்றொரு திருத்தம்.

தற்போது விலைமாதர் இல்லம் என்றால் ஒன்று அல்லது இரண்டு பேர் பாலியல் சேவைக்காகப் பயன் படுத்தும் இடம் என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது.

புதிய விளக்கத்தின்படி, பாலியல் சேவைக்காகப் பயன்படுத்தப்படும் எந்த இடமானாலும் அது விலை மாதர் இல்லமாக எடுத்துக்கொள் ளப்படும்.

ஓர் இடத்தின் உரிமையாளர், வாடகைதாரர் அல்லது துணை வாடகைதாரர் என்ற யாராக இருந்தாலும் அவர் அந்த இடத்தைப் பாலியல் சேவைக்கு விட்டிருந்தால் புதிய சட்டத்தின்படி அவர் குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார்.

ஒருவேளை, அங்கு பாலியல் சேவை நடப்பது தனக்குத் தெரி யாது என்பதை அவர் நிரூபித்து விட்டால் அவர் அதிலிருந்து விடு படுவார்.

வீட்டு உரிமையாளர் அல்லது வாடகைதாரர் தங்கள் இடத்தில் பாலியல் சேவை நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்யும் பொறுப் புள்ளவர்கள்.

தங்கள் இடத்தில் தங்குவோர் கன்னியமிக்கவர்கள் என்பதை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். தாங்கள் வெளிநாட்டில் இருந்்தால் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி ஒருவரை அவர்கள் தங்கள் சார்பில் வாடகைதாரர்களைச் சந்தித்து விவரம் அறியும் பொறுப்பை ஒப்படைப்பதற்கு புதிய சட்டத்தில் இடம் உண்டு என்றும் திருவாட்டி சுன் சூலிங் விளக்கினார்.