உலக வெப்பமயமாதல் பொதுவாக வெப்பநிலை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால், குளிரூட்டிச் சாதனங்களை முடுக்கி விடுதல் நிலையை மேலும் மோச மாக்கலாம்.
கட்டடங்களிலும் வீடுகளிலும் உள்ள குளிரூட்டிச் சாதனங்களின் கரிம வெளியேற்றம் நாட்டின் ஒட்டுமொத்த கரிம வெளியேற்ற அளவில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்று சுற்றுப்புற, நீர்வளத் துறை மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 52.5 மில்லியன் டன் கரிம வெளி யேற்றுக்குக் காரணமாக இருந்தது.
கட்டடங்கள், வீடுகள் துறைகள் மொத்த கரிம வெளியேற்றத்தில் 19 விழுக்காட்டுக்குக் காரணமாக இருந்தது. இது தொழில்துறைக்கு அடுத்த நிலையில் இருக்கிறது.
தொழில்துறையின் கரிம வெளி யேற்றம், மொத்த கரிம வெளி யேற்றத்தில் 60 விழுக்காடு.
கட்டடங்கள், வீடுகள் துறை களின் கரிம வெளியேற்றத்தின் 19 விழுக்காட்டில் குறிப்பிடத்தக்க அளவு குளிரூட்டிச் சாதனங்களில் இருந்து வெளியானவை என்றும் டாக்டர் கோர் கூறினார்.
நிலப் போக்குவரத்து துறையின் கரிம வெளியேற்றம் 14 விழுக் காடு, நகராட்சி துறையின் கழிவை எரிசக்தியாக மாற்றும் பணியை மேற்கொள்ளும் எரியாலையில் இருந்து வெளியாகும் கரிம வெளி யேற்றம் சுமார் 3 விழுக்காட்டு என்றும் அமைச்சர் விவரித்தார்.
அனைத்து துறைகளிலிருந்து கரிம வெளியேற்றத்தின் அளவைக் குறைக்க சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளது என்று குறிப்பிட்ட டாக்டர் கோர், உதாரணத்துக்கு இந்த ஆண்டு நடப்புக்கு வந்த கரிம வரியைச் சுட்டினார்.
கட்டடங்களிலிருந்து கரிம வெளியேற்றத்தின் அளவைக் குறைக்க, புதிய கட்டடங்களும் பெரிய மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் கட்டடங்களும் குறைந்தபட்ச நிலைத்தன்மை தரத்தைக் கொண்டிருப்ப
தைக் கட்டட, கட்டுமான ஆணையம் உறுதி செய்யும்.
வீடுகளில் கட்டடங்களில் இருந்து கரிம வெளியேற் றத்தைக் குறைக்க தேசிய சுற்றுப்புற வாரியம் மேற் கொண்டிருக்கும் இரு திட் டங்கள் பற்றி அமைச்சர் விளக்கினார்.
கட்டாய எரிசக்தி ஒட்டு வில்லை திட்டத்தின்படி, பய னீட்டாளர்கள் எரிசக்தியைச் சேமிக்கும் ஆற்றல் உடைய மின்சாரச் சாதனங்களை வாங்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
வாரியம் அறிமுகப்படுத்தியுள்ள குறைந்தப்பட்ச எரிசக்தி ஆற்றல் தரங்கள் திட்டத்தின்படி ஆற்றல் குறைந்த சாதனங்கள் சந்தையில் இருந்து அகற்றப்படுகின்றன என்றும் அமைச்சர் ஏமி கோர் விளக்கமளித்தார்.

