தங்களுக்குப் பிறகு மத்திய சேம நிதிச் சேமிப்பைப் பெறு வதற்குரிய நபரை நியமிக்கத் தவறி, பின்னர் இறந்து போகும் உறுப்பினர்களின் பணத்தைக் கையாளும் பொதுச் சொத்துக் காவலர் அலுவலகம், கடந்த ஐந்து ஆண்டுகளில் அத்தகைய 88 விழுக்காட்டு பணத்தை விநியோகித்து இருக்கிறது.
2018ஆம் ஆண்டு இறுதி வரை, பொதுச் சொத்துக் காவலர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த $211 மில்லியன் தொகையிலிருந்து கோரப்படாத மத்திய சேம நிதித் தொகை $132 மில்லியன் இறந்தவர்களின் குடும்பத் தினருக்கு விநியோகிக்கப்பட்டது. கோரப்படாத பணத் துக்குச் சொந்தக்காரர்களைத் தேடி ஒப்படைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சட்ட மூத்த

