அடுத்த ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் 250 கிராம் எடைக்கு மேற்பட்டிருக்கும் ஆளில்லா வானூர்திகள் சிங்கப்பூரில் பயன்படுத்தப்படுவதற்கு முன் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் கட்டாயமாகப் பதிந்துகொள்ள வேண்டும்.
ஆளில்லா வானூர்திகள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்கும் தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஆகாயப் போக்கு வரத்து திருத்த மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தகுந்த அனுமதியின்றி ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்தும் முதல் முறை குற்றவாளிகள் அதிகபட்சமான $50,000 அபராதத்துடன் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் பெறலாம். மறுமுறை குற்றம் புரிபவர்களுக்கு ஐந்து ஆண்டு வரை சிறையும் $100,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.
பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஆளில்லா வானூர்திகளை இயக்கும் முதல்முறை குற்றவாளிகளுக்கு இதற்கு முன் $20,000 அபராதமும் 12 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
"கடுமையாக்கப்பட்ட விதிமுறைகள் ஆளில்லா வானூர் தியைப் பயன்படுத்துவோருக்கு அதிக பொறுப்புணர்வை ஏற்படுத்தும். தற்போதைய $20,000 அபராதம் ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்துவோரிடம் எவ்வித தாக்கத்தை யும் ஏற்படுத்தவில்லை. தங்கள் தவற்றை உணரத் தவறு வோருக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப் படுவதைத் தவிர வேறு வழியில்லை," என்றார் டாக்டர் லாம்.
ஆளில்லா வானூர்தியைப் பயன்படுத்துவோர் தங்கள் சாதனத்தைப் பதிவு செய்வதற்கு ஜனவரி 2ஆம் தேதி யிலிருந்து மூன்று மாத கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது.

