நடைபாதையில் மின்ஸ்கூட்டருக்குத் தடைக்கு வரவேற்பு

நடைபாதையில் மின்ஸ்கூட்டருக்குத் தடைக்கு வரவேற்பு

1 mins read
914f8a97-a7e6-4b78-a047-95c280c0fe19
பிடோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபாதையில் சைக்கிளோட்டி சென்ற 65 வயது திருவாட்டி ஓங் பீ எங் (படம்) வேகமாக வந்த மின்ஸ்கூட்டர் ஒன்றால் மோதப்பட்டு கடும் காயங்களுக்கு ஆளானார். -

நடைபாதையில் இன்று முதல் மின்ஸ்கூட்டருக்குத் தடை விதிக்கும் அரசாங்கத்தின் செயல் சரியான முடிவு என்கிறார் மின்ஸ்கூட்டர் விபத்தில் மாண்டவ ரின் சகோதரர்.

பிடோக்கில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபாதையில் சைக்கிளோட்டி சென்ற 65 வயது திருவாட்டி ஓங் பீ எங் (படம்) வேகமாக வந்த மின்ஸ்கூட்டர் ஒன்றால் மோதப்பட்டு கடும் காயங்களுக்கு ஆளானார்.

போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின், இந்தத் தடை குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மின்ஸ்கூட்டர் தொடர்பிலான விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதன் தொடர்பில் நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய மரணமடைந்த திருவாட்டி ஓங்கின் 53 வயது சகோதரர் திரு ஆண்டி ஓங், நடைபாதையில் மின்ஸ்கூட்டரின் நடமாட்டம், அதே நடைபாதையைப் பயன்படுத்தும் இதர மக்களுக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்துகிறது. இப்போது தடை அமல் படுத்தப்படும் என்பதால் தைரியத்துடன் நாம் நடைபாதை யைப் பயன்படுத்தலாம் என்றார்.

"தனிநபர் நடமாட்டச் சாதன விபத்தால் எனது சகோதரி இறந்துவிட்டார் என்பதை இன்னும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இத்தகைய சாதனங்களின் இறக்கு மதி சிங்கப்பூரில் கட்டுப்படுத்தப்பட வேண்டும்," என்றும் திரு ஓங் கூறினார்.