உரிய காலத்தில் தேசிய சேவை ஆற்றாதவருக்கு 9 வாரச் சிறை

உரிய காலத்தில் தேசிய சேவை ஆற்றாதவருக்கு 9 வாரச் சிறை

1 mins read
e07d0388-8693-4e8c-8cb7-dc00ac8d6ab8
ஜோனதன் லீ ஹான் வென். (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

முழுநேர தேசிய சேவை கடமையாற்றாமல் நான்கு ஆண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் வசித்து வந்த சிங்கப்பூரர் ஒருவருக்கு நீதிமன்றம் நேற்று ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

1996ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்த ஜோனதன் லீ ஹான் வென் என்பவரின் குடும்பம், ஜோனதன் பிறந்த மறு வருடமே சிங்கப்பூர் குடியுரிமையுடன் சிங்கப்பூரை விட்டு ஹாங்காங்குக்கு குடிபெயர்ந்தது. இங்கிலாந்தின் லான்காஸ்டர் பல்கலைக் கழகத்தில் கல்வியைத் தொடர்வதற்கு தேசிய சேவையை தள்ளிப்போடுவதற்காக 'சிஎம்பிபி' என்றழைக்கப்படும் மத்திய ஆள்பல தளத்திற்கு அனுமதி கேட்டு அவரது தாயார் விண்ணப்பித்திருந்தார்.

தேசிய சேவையை தள்ளிப்போடுவதற்கான அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதைப் பொருட்படுத்தாமல் ஜோனதன் இங்கிலாந்தில் தனது பட்டக்கல்வியைத் தொடர்ந்தார். நான்காண்டுகளுக்குப் பிறகு தனது 22ஆம் வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி தேசிய சேவையில் சேர்ந்தார். நான்காண்டுகளாக தேசிய சேவையில் சேராதது, 2013 ஆம் ஆண்டு முதல் செல்லுபடியாகக் கூடிய அனுமதி இல்லாமல் வெளிநாட்டில் தங்கியிருந்தது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.

இந்த வழக்கில் ஜோனதனுக்கு நீதிமன்றம் நேற்று 9 வாரச் சிறைத் தண்டனை விதித்தது. இவர் தற்போது சிங்கப்பூர் ஆயுதப்படையில் தேசிய சேவையாற்றி வருகிறார்.