இளையர்கள் இருவர் சிவப்பு விளக்கை ஒளிரவிட்டுக் கொண்டு சாலையில் மின்ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றதால் இன்னொரு மின்ஸ்கூட்டர் ஓட்டி மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர். இந்தச் சம்பவம் கடந்த மார்ச் 16ஆம் தேதி இரவு 8.20 மணிக்கு பாசிர் ரிஸ் டிரைவ் 1ல் நடந்தது.
இந்த வழக்கில் இளையர்கள் இருவருக்கும் நன்னடத்தைக் கண்காணிப்பு தண்டனையாக வழங்கப்பட்டது.
19 வயது முகம்மது ரஸிக் முகமதுவுக்கு 18 மாதக் கண்காணிப்புத் தண்டனை அளிக்கப்பட்டது. இதில் மூன்று மாதங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவார். அவரது நண்பரான முகமது இர்ஸான் தயிப் ஸோஹ்ரி, 19 வயது, 15 மாதங்கள் நன்னடத்தைக் கண்காணிப்பில் இருப்பார்.

