நாடாளுமன்றம்: ஈசூன் வட்டாரத்தில் கூடுதலாக 2,000 பாலர் பள்ளி இடங்கள்

நாடாளுமன்றம்: ஈசூன் வட்டாரத்தில் கூடுதலாக 2,000 பாலர் பள்ளி இடங்கள்

2 mins read
2fccf46c-c2ef-47af-af6c-79fc80bc9675
குழந்தைப் பாரமரிப்பு நிலையங்கள் ஏழு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு முழுநேர, பகுதி நேரப் பராமரிப்பை வழங்குகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வரும் 2022ஆம் ஆண்டுக்குள் ஈசூன் வட்டாரத்தில் அரசாங்க ஆதரவு பெற்ற கூடுதலாக 2,000 பாலர் பள்ளி இடங்கள் கிடைக்க வழி ஏற்படுத்தப்படும்.

இதன் மூலம் குடியிருப்பாளர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான, கட்டுப்படியாகக்கூடிய பாலர் பள்ளிக் கல்வி கிடைக்க வழி பிறக்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் முகம்மது ஃபைசல் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

ஈசூன் திட்டமிடல் வட்டாரத்தில் இப்போது 67 குழந்தைப் பரமரிப்பு நிலையங்கள் உள்ளன. ஈசூன் சென்ட்ரல், நார்த்லாந்து, ஈசூன் ஈஸ்ட், ஈசூன் சவுத், லோவர் சிலேத்தார் ரெசர்வோர், ஸ்பிரிங் லீஃப், நீ சூன், காத்திப், ஈசூன் வெஸ்ட் ஆகிய பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள குழந்தைப் பரா மரிப்பு நிலையங்களில் மூன்றில் ஒரு பகுதி ஈசூன் சவுத் வட்டாரத் தில் உள்ளன என்று நீ சூன் குழுத் தொகுதி உறுப்பினர் லீ பீ வா கேட்ட கேள்விக்கு டாக்டர் ஃபை சல் பதிலளித்தார்.

"குழந்தைப் பாரமரிப்பு நிலையங் கள் ஏழு வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு முழுநேர, பகுதி நேர பராமரிப்பை வழங்குகின்றன.

"ஏழு வயதிலிருந்து 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு மாணவர் பராமரிப்பு நிலையங்கள் பராமரிப்பையும் மேற்பார்வையும் அளிக்கின்றன.

"பள்ளி சார்ந்த மாணவர் பரா மரிப்பு நிலையங்களைக் கல்வி அமைச்சு படிப்படியாக அதிகரித்து உள்ளது," என்றும் டாக்டர் ஃபை

சல் விளக்கினார்.

அடுத்த ஆண்டுக்குள் எல்லா 185 தொடக்கப் பள்ளிகளிலும் மாணவர் பராமரிப்பு நிலையங்கள் செயல்படும்.

பள்ளி சார்ந்த மாணவர் பரா மரிப்பு நிலையங்களில் பதிந்திருக் கும் 3,021 மாணவர்களில் கிட்டத் தட்ட பாதிப் பேர் அல்லது 45 விழுக்காட்டினர் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் மாணவர் பராமரிப்புக் கட்டண உதவித் திட் டத்தின்கீழ் கழிவு பெற்ற கட்ட ணத்தைச் செலுத்துகிறார்கள்.

"நீ சூன் சவுத் தொகுதியைப் பொறுத்தவரையில், நேவல் பேஸ் தொடக்தப் பள்ளியிலும் பெய்யிங் தொடக்கப் பள்ளியிலும் மாணவர் பாராமரிப்பு நிலையங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் மேலும் இரு நிலையங்கள் உள்ளன.

"இவற்றைச் சேர்த்து இந்த நான்கு நிலையங்களில் 400 மாண வர்கள் பயில்கிறார்கள். மேலும் அதிகமான மாணவர்களைச் சேர்த் துக்கொள்ளும் ஆற்றல் இந்நிலை யங்களுக்கு உண்டு.

தமது அமைச்சும் கல்வி அமைச்சும் மாணவர்களின் தேவைக்

கேற்ப இடங்களை அதிகரிக்கும்," என்றும் டாக்டர் ஃபைசல் கூறினார்.