நாடாளுமன்றம்: முதியவர்களின் மெடிசேவ் கணக்கில் கூடுதல் தொகையைப் பெறுவது குறித்து ஆய்வு

நாடாளுமன்றம்: முதியவர்களின் மெடிசேவ் கணக்கில் கூடுதல் தொகையைப் பெறுவது குறித்து ஆய்வு

1 mins read
5ce1ff57-d150-4099-ac7a-40b39de0b452
-

தங்கள் வெளிநோயாளி சிகிச்சைக்காக மூத்த குடிமக்கள் தங்கள் மெடிசேவ் கணக்குகளில் கூடுதல் பணத்தை எடுக்க முடியுமா என்பது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

தங்கள் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதைப் பொறுத்து அவர்கள் எடுக்கக்கூடிய தொகையை நிர்ணயிக்கலாம் என்று அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினர் பிரித்தம் சிங் கூறிய யோசனையையும் பரிசீலிக்கலாம் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் கூறி னார்.

தற்போது, 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆண்டுக்கு கூடுதலாக $200 வரை வெளிநோ யாளி சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, மற்ற அனைவரும் ஆண்டுக்கு $500 வரை மெடிசேவ் தொகையிலிருந்து மருத்துவமனை, பலதுறை மருந்தகம், சாஸ் பொது மருந்தகங்கள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

இந்தப் பணம் நாள்பட்ட நோய் பராமரிப்பு. தடுப்பூசிகள், சுகாதாரப் பரிசோதனை அல்லது தொடக்க நிலை தடுப்பு பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

கடந்தாண்டில் 136,000 பேர் அல்லது தகுதி பெற்ற சிங்கப்பூரர்களில் 16 விழுக்காட்டினர் தங்களின் ஆண்டு வரம்பான $700யையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார் திரு டோங்.

"அப்படி என்றால், பத்தில் எட்டுக்கு மேற்பட்டோர் தங்கள் வரம்புக்கு உட்பட்டுதான் மெடிசேவ் பணத்தைப் பயன்படுத்தி உள்ளார்கள். ஆக, தற்போதைய வரம்பு சரியான நிலையில்தான் உள்ளது," என்றும் அமைச்சர் எட்வின் டோங் விவரித்தார்.