நாடாளுமன்றம்: 2020 ஏப்ரலுக்குள் சிங்கப்பூரும் மலேசியாவும் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும்

நாடாளுமன்றம்: 2020 ஏப்ரலுக்குள் சிங்கப்பூரும் மலேசியாவும் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும்

2 mins read
b069218c-84af-4352-ae6e-699403c3288d
-

உட்லண்ட்சுக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான 'ஆர்டிஎஸ்' ரயில் திட்டத்தின் தொடர்பில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் சிங்கப்பூரும் மலேசியாவும் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் அங் மோ கியோ குழுத் தொகுதி உறுப்பினர் கான் தியாம் போ கேட்ட கேள்விக்கு அளித்த எழுத்துபூர்வ பதி லில் அமைச்சர் கோ, ஆர்டிஎஸ் திட்டத்தை மூன்றாவது முறையாக அதாவது 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தள்ளிப்போட மலேசியா கடந்த மாதம் 29ஆம் தேதி வேண்டுகோள் விடுத்ததா கக் கூறினார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் பேரில் இந்த ஆறு மாத நீட்டிப்புக்கான வேண்டுகோளை சிங்கப்பூர் ஏற்றுக் கொண்டது என்றும் திரு கோ சொன்னார். கடந்த மாதம் 31ஆம் தேதி யன்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, இந்தத் திட்டத்தை மேற் கொள்வதற்கு மலேசியா முடிவு எடுத்துள்ளது என்று அறிவித்தார். ஆனால், திட்டத்தை மேலும் சிறிது காலத்துக்குத் தள்ளிப்போட மலே சியா சிங்கப்பூரிடம் வேண்டுகோள் விடுத்ததைப் பற்றி அவர் தெரிவிக்கவில்லை.

"திட்டத்தில் மலேசியா பரிந்து ரைத்திருக்கும் மாற்றங்கள் இரு தரப்பும் தற்போது பேச்சு வார்த்தை நடத்துகின்றன. ஆர்டிஎஸ் இணைப்பு இருதரப்பு உடன்பாட்டில் திருத்தங்களைச் செய்வதும் அந்த மாற்றங்களில் அடங்கும்.

"திருத்தப்பட்ட இருதரப்பு உடன் பாட்டுடன், நீட்டிப்பு காலம் முடி வரையும் தறுவாயில் மேலும் இரு உடன்பாடுகள் கையெழுத்தாக வேண்டும்," என்றும் அமைச்சர் தமது பதிலில் விவரித்தார்.

சிங்கப்பூரின் எஸ்எம்ஆர்டி நிறுவனமும் மலேசியாவின் தேசிய ரயில் நடத்துநரான 'ப்ராசரனா மலேசியா' நிறுவனமும் இணைந்து கூட்டு முதலீட்டு நடத்துநர் நிறுவ னத்தை அமைக்க வேண்டும் என் பது ஓர் உடன்பாடு. இருநாட்டு அரசாங்கங்களும் இணைந்து ஆர்டிஎஸ் நடத்துநராக ஒரு கூட்டு முதலீட்டு நிறுவனத்தை நியமிக்க வழி செய்ய வழி வகுப் பது மற்றோர் உடன்பாடு.

"முன்பு ஒப்புக்கொண்டதுபோல சிங்கப்பூரின் எம்ஆர்டி ரயில் திட் டத்துக்குப் பதிலாக எல்ஆர்டி எனும் இலகு ரயில் திட்டத்தைப் பயன்படுத்தலாம் என்றும் கடந்த மாதம் 31ஆம் தேதி மலேசியா பரிந்துரைத்தது. திட்டத்தின் செலவை 36 விழுக்காடு குறைக்கவும் மலே சியா எண்ணம் கொண்டிருக்கிறது.

"மலேசியாவின் உத்தேச மாற் றங்களை சிங்கப்பூர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்ற போதிலும் திறந்த மனத்தோடு அந்நாட்டின் பரிந்துரைகளை சிங்கப்பூர் கவனமாகவும் ஆக்கபூர்வமாகவும் பரிசீலிக்கும்," என்றும் அமைச்சர் கோ விளக்கமளித்தார். பல்வேறு தாமதங்களைக் கண்டிருக்கும் இத்திட்டத்தில், முதலில் ரயில்கள் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தொடங்கப் படுவதாக இருந்தது.