சட்டவிரோத மின்சிகரெட் வைத்திருந்த 465 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

சட்டவிரோத மின்சிகரெட் வைத்திருந்த 465 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 mins read
59d51d85-dac3-4faa-a296-a7a8d06d17af
-

சிங்கப்பூர் போலிஸ் படை, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து சுகாதார அறிவியல் ஆணையம், மின்சிகரெட்டுகளின் சட்டவிரோத இறக்குமதி, விற்பனை, வாங்குதல் ஆகியவற்றைத் தடுப்பதில் தொடர்ந்து பணியாற்றும் என்று உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் தொடர்பான தடை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடப்புக்கு வந்ததிலிருந்து இதுவரை மின்சிகரெட்டு களை வைத்திருந்த குற்றத்துக்காக 465 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மின்சிகரெட்டுகளை விற்பனை செய்த 219 சம்பவங்கள் சுகாதார அறிவியல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

எச்சரிக்கை, அபராதம், வழக்கு என்று தண்டனைகள் வேறுபடுகின்றன என்று கூறிய திரு அம்ரின், மின்சிக ரெட்டுகளை இறக்குமதி செய்து, விற்பனை செய்த ஒருவருக்கு ஆக அதிக அபராதமாக $99,000 விதிக்கப்பட்டது என்றும் சொன்னார்.

"மேலும் இணையத்தில் மின்சிகரெட்டுகளின் விற்பனைக்கு எதிராகச் செயல்படும்படி கேரசோல், இன்ஸ்டகிராம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட அமைப்புகள் இணைந்து பணியாற்றுகின்றன. அதேவேளையில், புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை வலுப்படுத்தும் முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன," என்றும் திரு அம்ரின் விவரித்தார்.