உடற்குறையுள்ளோரில் அதிகமானோர் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்

உடற்குறையுள்ளோரில் அதிகமானோர் விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்

1 mins read
7ef58bac-fd5b-4e84-ad98-8ebb25d0c45c
சக்கர நாற்காலி. (படம்: ராய்ட்டர்ஸ்) -

உடற்குறையுள்ளோரில் மேலும் பலர் விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இருப்பினும், இன்னும் அதிகமானோர் விளை யாட்டுகளில் பங்கேற்க என்ன செய்யலாம் என்பதை இதன் தொடர்பிலான ஒரு பெருந்திட்டம் மூலம் சாதிக்க முடியுமா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் தெரிவித்தார்.

'ஸ்போர்ட் சிங்கப்பூர்' அமைப்பின் வருடாந்திர தேசிய விளையாட்டுகள் பங்கேற்பு ஆய்வின்படி, உடற்குறையுள்ளோரில் பாதிக்கும் சற்று அதிகமாக அதாவது 51 விழுக்காட்டினர் கடந்த ஆண்டில் விளையாட்டுகளில் பங்கேற்றனர் என்று தெரிய வந்தது. 2015ஆம் ஆண்டில் இந்த விகிதம் 28 விழுக்காடுதான்.

"உடற்குறையுள்ளோரில் அதிகமானோர் விளையாட்டுகளில் பங்கேற்பது உற்சாகமளிக்கிறது," என்றார் திருவாட்டி சிம் ஆன்.

நியமன உறுப்பினரும் உடற்குறையுள்ள விளையாட்டாளருமான யிப் பின் சியூ, உடற்குறையுள்ளோர் விளையாட்டு பெருந்திட்டம் பற்றிய ஆகக் கடைசி தகவல் பற்றி வினவினார்.

'ஸ்போர்ட் சிங்கப்பூர்' அமைப்பு அதன் பங்குதாரர்களுடன் 2016ஆம் ஆண்டு முதல் உடற்குறையுள்ளோர் விளையாட்டு பெருந்திட்டத்தைச் செயற்படுத்துவதில் பணியாற்றி வருகிறது. இதன் தொடர்பில் உடற்குறையுள்ளோருக்கான நான்கு நிபுணத்துவ நிலையங்களும் ஏழு உடற்பயிற்சிக் கூடங்களும் திறக்கப்பட்டுள்ளன," என்று அமைச்சர் விவரித்தார்.