ராஃபிள்ஸ் பிளேஸில் மோதிய டாக்சியும் காரும்

ராஃபிள்ஸ் பிளேஸில் மோதிய டாக்சியும் காரும்

1 mins read
dda01bc5-ec5d-4759-8b51-b82a8c8e1c34
-

மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு காரும் ஒரு டாக்சியும் சேதமடைந்தன.

விபத்துக்குள்ளான கார், ராஃபிள்ஸ் பிளேஸ் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகிலுள்ள ஏஐஏ கோபுரத்திற்கு அருகே பக்கவாட்டில் கவிழ்ந்திருந்ததைக் காட்டும் சில படங்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.

காலை 10.05 மணிக்கு ராபின்சன் ரோட்டில் இந்த விபத்து ஏற்பட்டது. டாக்சியின் 62 வயது ஓட்டுநர் சுயநினைவுடன் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.

துணை மருத்துவ அதிகாரிகளிடமிருந்து உதவி பெற்ற கார் ஓட்டுநர், மேற்கொண்டு மருத்துவ உதவி பெற மறுத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

அவ்விரு ஆடவர்களும் கடுமையாகக் காயமடையவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

போலிசாரின் விசாரணை தொடர்கிறது.