சிங்கப்பூரில் யூடியூப் மியூசிக், யூடியூப் பிரிமியம் அறிமுகம்

யூடியூப் தளம் தனது யூடியூப் மியூசிக் சேவையை புதன்கிழமை தொடங்கியுள்ளது. சந்தாத்தொகையுள்ள இச்சேவையைத் தொடங்கிய அந்நிறுவனம், ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை ஆகிய இசை ஒலிபரப்புச் சேவைகளுடன் மோதவிருக்கிறது.

யூடியூப் மியூசிக் இசை ஒலிபரப்புச் சேவை கடந்தாண்டு உலகின் மற்ற பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட்டது. விளம்பரங்களுடன் கூடிய இலவச சேவையையும் மாதத்திற்கு 9.98 வெள்ளி கட்டணம் கொண்ட யூடியூப் மியூசிக் பிரிமியம் எனும் மற்றொரு சேவையையும் இனி யூடியூப்பில் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் யூடியூப் காணொளிகளைப் பார்க்கும்போது விளம்பரங்கள் இருக்காது. இணையத்தில் இணைந்திருக்காத நேரத்திலும் அவர்கள் தொடர்ந்து இசையைக் கேட்டுக்கொண்டிருக்கலாம். அத்துடன் அவர்கள் பாடல்களையும் இசைக்காணொளிகளையும் பதிவிறக்கம் செய்யலாம்.

யூடியூப் பிரிமியம் இதுபோன்ற விளம்பரமில்லா அனுபவத்தையும் இணையமற்ற பதிவிறக்கங்களையும் மாதத்திற்கு 11.98 வெள்ளி முதல் வழங்குகிறது. சிங்கப்பூரைத் தவிர, கூகல் யூடியூப் மியூசிக்கும் யூடியூப் பிரிமியமும் ஹாங்காங், இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்தச் சேவை 78 நாடுகளில் கிடைக்கிறது. அதற்குப் போட்டியாக இருக்கும் ஸ்பாட்டிஃபை சேவை, 79 நாடுகளில் இயங்குகிறது.

மே மாத நிலவரப்படி யூடியூப் மியூசிக் சேவைக்கு 15 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். போட்டி நிறுவனமான ஸ்பாட்டிஃபைக்குக் கட்டணம் கட்டும் 113 மில்லியன் சந்தாதாரர்களும், ஆப்பிளுக்கு 60 மில்லியனுக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களும் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!