(காணொளி): 'உணவுப்பொருளில் உள்ளவை புழுக்கள் அல்ல'

(காணொளி): 'உணவுப்பொருளில் உள்ளவை புழுக்கள் அல்ல'

1 mins read
c1f7922e-bf2a-432d-876f-49a240cdcbfa
-

"சிக்கன் பிராங்க்ஸ்" எனும் பதப்படுத்திய கோழி உணவுப்பொருளைச் சுற்றி மிதப்பவை புழுக்கள் அல்ல என்று அந்த உணவுப்பொருளின் ஏற்றுமதியாளர் தெரிவித்திருக்கிறார்.

வேலி செஃப் நிறுவனம் உற்பத்தி செய்யும் இந்த உணவுப்பொருளைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்தச் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நீர் நிரம்பிய கிண்ணம் ஒன்றில் சில சிக்கன் பிராங்க்ஸ் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த நீரின்மீது பல்வேறு வெள்ளை கீற்றுகள் மிதப்பது தெரிகிறது. அதே காணொளியில், இவை சில நுண்ணுயிரிகள் என ஒருவர் மண்டரின் மொழியில் கூறுவதும் பதிவாகியுள்ளது.

இது குறித்து விசாரணை நடத்தியதில், அவை புழுக்கள் அல்ல என்று அந்த உணவுப்பொருளை ஏற்றுமதி செய்யும் டா சோங் ஹோங் லிமிட்டெட்டின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.