சிறுமிகளிடம் பாலியல் உறவுகொண்ட ஆடவருக்கு 58 மாதம் சிறை

சிறுமிகளிடம் பாலியல் உறவுகொண்ட ஆடவருக்கு 58 மாதம் சிறை

1 mins read
d60ef438-b18a-4ea5-aa94-e79f15d8be4d
சிறுமிகளைத் தன் வலைக்குள் விழவைக்க தனது கையடக்கக் கணினியைப் பயன்படுத்தினார் விற்பனைப் பொறியாளராகப் பணியாற்றிய ஏஞ்சலோ அன்வில் கோ ஹாவ்-யி. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

விற்பனைப் பொறியாளராகப் பணியாற்றிய ஏஞ்சலோ அன்வில் கோ ஹாவ்-யி, "வசிந்தா கோ" என பெண் பெயரில் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்துக்கொண்டு, சிறுமியரிடம் ஆசைவார்த்தை பேசி நட்பு ஏற்படுத்திக் கொண்டார். அவர்களிடம் 'எஸ்கார்ட்ஸ்' ஆக பணிபுரிய விரும்பினால் சொல்லுங்கள்.

அழகான, பணக்கார, ஆரோக்கியமான வாடிக்கையாளர்களை மட்டுமே தனது வாடிக்கையாளர்கள் என்று கூறியுள்ளார். அப்போது சிறுமிகள், 'நாங்கள் வயது குறைந்தவர்கள்' என்று கூறும்போது, "அதைப்பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்படாதீர்கள். அது ஒரு பொருட்டே இல்லை என்று கூறி அவரது வலையில் விழ வைத்துள்ளார்.

இவ்வாறு அவர் 13 வயதுக்கும் 17 வயதுக்கும் உட்பட்ட எட்டு சிறுமிகளைச் சந்தித்து அவர்களிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்டது தெரியவந்துள்ளது.

பெரும்பாலான சிறுமியரிடம் பாதுகாப்பற்ற முறையில் பாலியல் உறவு வைத்துக்கொண்டார். சில சிறுமியரிடம் வைத்துக்கொண்ட அதுபோன்ற உறவை காணொளியாகப் பதிவு செய்துள்ளார். 34 வயது சிங்கப்பூரரான ஏஞ்சலோவுக்கு நீதிமன்றம் நேற்று 58 மாதம் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.