தனது முதலாளியின் மூன்று வயது இரட்டையர்களில் ஒரு சிறுவனுக்கு உணவு ஊட்டும்போது, அச்சிறுவன் உணவின் சிறு பகுதியை அவனது டிசட்டையில் சிந்தி விட்டான். அதனால் கோபமடைந்த பணிப்பெண் அச்சிறுவனின் வலது காதைப்பிடித்துத் திருகினார். ஃ பல்லோரினா ஜோன் மேரி காயரெஸ் என்ற அந்தப் பணிப்பெண், சிறுவனின் காதை கிள்ளுவதற்கு முன்னர் அவனைப் பார்த்து சத்தம் போட்டுள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் கண்காணிப்புக் கருவியில் பதிவாகியதால் இந்தச் சம்பவம் முதலாளிக்குத் தெரியவந்தது. இந்த வழக்கில் 25 வயதான காயரெஸுக்கு நேற்று 4 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
3 வயது சிறுவனை கொடுமைப்படுத்திய பணிப்பெண்ணுக்குச் சிறை
1 mins read

