எஸ்பிஎல் காற்பந்துக் குழு வாரியர்ஸ் மீது 107 குற்றச்சாட்டுகள்

எஸ்பிஎல் காற்பந்துக் குழு வாரியர்ஸ் மீது 107 குற்றச்சாட்டுகள்

1 mins read

சிங்கப்பூர் பிரிமியர் லீக் கிளப் வாரியர் காற்பந்துக் குழு தன் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்காததால் நேற்று அதன் மீது 107 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 8, செப்டம்பர் 8, அக்டோபர், 8 ஆகிய தேதிகளில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சம்பளத்தை இந்தக் காற்பந்துக் குழு கொடுக்கவில்லை. இதனால் அக்குழுவுக்காக விளையாடும் காற்பந்து வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள், நிர்வாக ஊழியர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 5ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.