சிங்கப்பூர் உணவு அமைப்பும் தேசிய பூங்காக் கழகமும் 2015 முதல் மலேசியா, சிங்கப்பூர் எல்லையில் நாய் களுக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றன. நாய்களுக்கு ராபிஸ் வைரஸ் தொற்று ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது இந்த நடவடிக்கையின் நோக்கம். ஜோகூர் நீரிணையிலும் பூலாவ் உபினிலும் உள்ள கடலோர மீன் பண்ணை களில் நாய்களுக்குத் தடுப்பூசி போட்டு அவற்றை அணுக்க மாகக் கண்காணிப்பது இந்த நடவடிக்கையில் அடங்கும்.
இதற்காக நுண்சில்லு களும் ரத்த சோதனைகளும் பயன்படுத்தப்படுகின்றன. வருங்காலத்தில் அதிகாரிகள் நாய்களை அடையாளம் காணும் வகையில் அவற்றின் படங்களும் எடுக்கப்படும்.
நவம்பர் 4 முதல் 15ஆம் தேதி வரை வாரமுடிவு நாட்கள் நீங்கலாக, 110 பண் ணைகளில் இந்த ஆண்டு நடவடிக்கை இடம் பெறும். அவற்றில் மொத்தம் 62 பேர் பங்கெடுப்பர்.

