4 மாடி உயர திமிங்கிலத்தை டிசம்பர் வரை பார்க்கலாம்

4 மாடி உயர திமிங்கிலத்தை டிசம்பர் வரை பார்க்கலாம்

1 mins read
db7830e9-26ba-4d84-854e-493d29a63e2d
மறுபுழக்க பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திமிங்கிலத்தை விருது வென்ற அமெரிக்க சிற்பிகளான ஜாசோன் லிமோஸ்கி, லெஸ்லே சாங் ஆகியோரின் வடிவமைத்துள்ளனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

மரினா பே சேண்ட்சில் நவம்பர் 6ஆம் தேதி நான்கு மாடி உயரம் உள்ள திமிங்கல கலை வடிவம் காட்சிக்கு வைக்கப்படும்.

கலை அறிவியல் அருங்காட்சியத்தில் டிசம்பர் வரை அதை பொதுமக்கள் காணலாம். விருது வென்ற அமெரிக்க சிற்பிகளான ஜாசோன் லிமோஸ்கி, லெஸ்லே சாங் ஆகியோரின் வடிவமைப்பில் உருவாகி இருக்கும் இந்த கலை வடிவம், ஆழ்கடலில் இருந்து கரை ஒதுங்கிய ஐந்து டன் மறுபுழக்க பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கடலில் அளவுக்கு அதிகமாக கழிவுப்பொருட்கள் கலக்கின்றன என்பதைப் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி அறிவுறுத்தும் வகையில் இந்தக் கலை வடிவம் காட்சிக்கு வைக்கப்படுகிறது. படம்: ஓஷன் ரெக்கவரி அலையன்ஸ்