காய்கறிகளை நன்கு ஊறவைத்து பிறகு சமைக்கவேண்டும்

காய்கறிகளை நன்கு ஊறவைத்து பிறகு சமைக்கவேண்டும்

1 mins read
c168981c-d1b5-4774-99a8-cf6d307f3fca
தொழில்நுட்பக் கல்விக் கழகமும் தேசிய சிறுநீரக அறநிறுவனமும் அக்டோபர் 14ஆம் தேதி நடத்திய அந்த சமையல் போட்டியில் வெற்றிபெற்ற மூன்று குழுக்கள்  22 நோயாளிகளுக்கு நேரடியாக சமைத்துக் காட்டி தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இரத்த சுத்திகரிப்புச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகள் எவை என்பதைப் பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்தும் வகையில் ஒரு சமையல் போட்டி நடந்தது. காய்கறிகளைத் தண்ணீரில் நன்கு ஊறவைத்து பிறகு சமைக்க வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் ஆலோசனை கூறப்பட்டது.

தொழில்நுட்பக் கல்விக் கழகமும் தேசிய சிறுநீரக அறநிறுவனமும் அக்டோபர் 14ஆம் தேதி நடத்திய அந்த சமையல் போட்டியில் வெற்றிபெற்ற மூன்று குழுக்கள் 22 நோயாளிகளுக்கு நேரடியாக சமைத்துக் காட்டி தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டன.

உணவில் அளவுக்கு அதிக பொட்டாசியம் இருந்தால் இதயத்துக்கு ஆபத்து என்று அந்த நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர். புரதச்சத்து அதிகமாகவும் பாஸ்பேட், சோடியம் பொட்டாசியம் குறைவாகவும் இருக்கும் உணவே நல்லது என்று அவர்கள் கூறினர்.

பொதுவாக நார்ச்சத்துகள், காய்கறிகள் எல்லாம் உடலுக்கு நல்லது என்று கூறப்படுகிறது. இருந்தாலும் சில நேரங்களில் இவை இரத்த சுத்திகரிப்பு நோயாளிகளுக்குப் பொருத்தமற்றவையாகப் போய்விடும்.

கீரை உள்ளிட்ட காய்கறிகளைச் சிறிது சிறிதாக நறுக்கி 1 முதல் 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தால் பொட்டாசியம் குறைந்துவிடும். முட்டைகோஸ், குடை மிளகாய் போன்ற குறைந்த அளவு பொட்டாசியம் உள்ள காய்கறிகளைச் சாப்பிடும்படி வல்லுநர்கள் கூறினர்.